8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

இதோ 10 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள் : எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ்

 1. நமது உடலானது பிரமிப்பான விஷயம், நாம் சுவாசிக்கின்ற, குடிக்கின்ற, சாப்பிடுகின்ற அல்லது தொடுகின்றவற்றில் இருக்கும் கிருமிகளிலிருந்து நோய்களை அடைவதில் இருந்து இது ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பான வழிகளில் காக்கின்றது.
 2. எச் ஐ வி என்பது ஒரு கிருமி இது வைரஸ் எனப்படுகிறது (V என்பது VIRUS என்பதைக் குறிக்கிறது). இது குறிப்பாகவே மிகவும் அபாயகரமான வைரஸ் ஆகும், கிருமிகளிடமிருந்து நமது உடலைக் காக்கின்ற வேலையை இது தடுத்துவிடுகின்றது.
 3. எச் ஐ வி அபாயகரமாவதைத் தடுக்கின்ற மருந்துகளைத்தான் அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் ஆனால் உடலில் இருந்து அதனை அறவே நீக்குவதற்கான ஒரு வழியை எவரும் கண்டுபிடிக்கவில்லை.
 4. காலப்போக்கில் மருந்துகள் இல்லாமையால் எச் ஐ வி கொண்ட மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி உண்டாகிறது. எய்ட்ஸ் என்பது உடலை மேலும் மேலும் பலவீனமாக்குகின்ற தீவிரமான சுகவீனங்கள் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
 5. எச் ஐ வி என்பது உடலுறவின்போது கண்ணுக்குத் தெரியாமல் உடலில் இருக்கும் ரத்தம் மற்றும் இதர திரவங்களில் உண்டாகி அங்கு வாழ்கிறது. எச் ஐ வி என்பது இப்படி பரவுகிறது:1) உடலுறவின்போது, (2) தொற்றிய தாயிடமிருந்து சிசுக்களுக்கு, (3) ரத்தத்தில்.
 6. உடலுறவில் இருந்து எச் ஐ வி தொற்றிவிடாமல் இருக்க மக்கள் கையாளும் வழிகள் (1) உடலுறவு கொள்ளாதிருத்தல், (2) உண்மையான உறவுமுறை கொள்ளுதல் அல்லது (3) ஆணுறைகளை உபயோகித்து உடலுறவு கொள்ளுதல் (பாதுகாப்பான உடலுறவு).
 7. எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கொண்ட மக்களுடன் விளையாடலாம், உணவைப் பகிர்ந்துகொள்ளலாம், குடிக்கலாம், கை குலுக்கலாம் கட்டிப்பிடிக்கலாம். இப்படியான செயல்கள் பாதுகாப்பானவை மற்றும் வைரஸ் தொற்றுவதில்லை.
 8. எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கொண்ட மக்கள் பயத்துடனும் சோகத்துடனும் இருப்பார்கள். எவர் ஒருவரையும்போலவே அவர்களுக்கும் ோவர்களின் குடும்பத்தாருக்கும் அன்பும் அரவணைப்பும் தேவை. அவர்கள் தங்கள் கவலைகளைப் பற்றி பேசுவது அவசியம்.
 9. அவர்கள் தங்களுக்குள்ளாக்வும் மற்றவர்களுக்கும் உதவுவதற்கு, தங்களுக்கு எச் ஐ வி அல்லது எய்ட்ஸ் இருப்பதாக நினைக்கும் மக்கள் மருத்துவகம் அல்லது மருத்துவமனைக்கு சோதனைக்காகவும் அல்லது ஆலோசனைக்காகவும் செல்வது அவசியம்.
 10. பெரும்பாலான நாடுகளில், எச் ஐ வி கொண்டிருக்கும் மக்கள் உதவி மற்றும் சிகிச்சையைப் பெறுகின்றனர். ஆண்ட்டிரெட்ரோவைரல் சிகிச்சைமுறை எனப்படும் ஒரு மருந்து (ஏ ஆர் ட்டி) அவர்களை நீண்டகாலம் வாழவைக்க உதவுகிறது.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org.

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்: குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • நமது சொந்த மொழியில் நமது வார்த்தைகளையே பயன்படுத்தி எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய செய்திகளை உண்டாக்கவும்!
 • செய்திகளை மறந்துவிடாமல் இருக்க இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவும்!
 • பிற குழந்தைகள் மற்றும் எங்கள் குடும்பங்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • எச் ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய சிற்றேடுகள் மற்றும் தகவல்களை சேகரிக்கவும் அவற்றை சமூகத்தினரிடம் சேர்ப்பிக்கவும்.
 • எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய நமது கேள்விகளுக்கு பதிலளிக்க உடல் ஆரோக்கியப் பணியாளர் ஒருவரை நமது பள்ளிக்கு வரவேற்கவும்.
 • எய்ட்ஸ்-இனால் பாதிக்கப்பட்ட நமது சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கவும்.
 • The Lifeline Game விளையாட்டு விளையாடவும் மற்றும் நம்மை எச் ஐ வி க்கு ஆளாக்கிவிடக்கூடிய ஆபத்தான நடவடிக்கைகள் பற்றி கண்டுபிடிக்கவும்.
 • உண்மையா அல்லது பொய்யா எனும் விளையாட்டை உருவாக்கி விளையாடவும், இதில் எச் ஐ வி நபருக்கு நபர் எப்படி தொற்றும் என்பதற்கான வழிகள் உள்ளன. இறுதியில் உதவி பெறுவதற்கு கேட்கவும் கேள்விகளை உபயோகிக்கவும்.
 • நெருக்கமான நட்புகள் மற்றும் நமது பாலுறவு உணர்ச்சிகள் பற்றி நமக்கு உதவுவதற்காக வாழ்க்கை திறன்களைக் கற்கவும்.
 • Fleet of Hope Game விளையாட்டை விளையாடி நம்முடைய நெருக்கமான உறவுகளுடன் பழகும்போது எச் ஐ வியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன பாதுகாப்பான நடத்தையை தெரிவு செய்வது என கண்டுபிடிக்கவும்.
 • எச் ஐ வி அல்லது எய்ட்ஸ் கொண்டிருக்கின்ற யாரோ ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சிரமங்களையும் நினைத்துப் பார்த்து உதவி செய்வதற்கு நாம் என்ன செய்வது என்றும் சிந்திக்கவும்.
 • எச் ஐ வி இருப்பதுபோல நடித்துக் காட்டி, எச் ஐ வி கொண்ட எவரோ ஒருவர் பார்க்க எப்படி இருப்பார் எனக் கண்டுகொள்ளவும்.
 • எச் ஐ வி கொண்டிருக்கின்ற மக்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் பற்றிய கதைகளைக் கேட்டு கலந்துரையாடவும்.
 • எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பற்றி நமக்கு என்ன தெரிந்திருக்கிறது என அறிய ஒரு வினாடி வினா நடத்தவும்.
 • எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய நமது கேள்விகளுக்காக நமது வகுப்பில் ஒரு கேள்விப் பெட்டியை துவக்கவும்.
 • எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய ஒரு சுவரொட்டியை நமது பள்ளியில் ஒட்டவும்.
 • எச் ஐ வி கொண்டிருக்கின்ற மீனா என்ற சிறுமி அல்லது ராஜீவ் என்ற சிறுவனின் தாயார் எச் ஐ வி கொண்டிருப்பதாகவும் அவர்கள் தங்கள் தாயை ஏ ஆர் ட்டி மருந்து எடுத்துகொள்வதற்காக மருத்துவகத்திற்கு செல்லுமாறு கூறுவது போல நடித்துக் காட்டவும்.
 • நமது பள்ளி மற்றும் நமது குடும்பத்தினரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒரு எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் செய்ல்பாட்டு கிளப் துவக்கவும்.
 • கேட்கவும் நம் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? நமது நோயெதிர்ப்பு அமைப்பு வலுவானதாகவும் செயல்பாட்டுக்கு தயாராகவும் இருப்பதற்கு எந்தவிதமான உணவுகள் உதவுகின்றன? எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் என்றால் என்ன? இந்த எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? தனக்கு எச்.ஐ.வி இருப்பதாக யாராவது கண்டுபிடித்தால் என்ன நடக்கும்? தனக்கு எச்.ஐ.வி உண்டாவதாக யாராவது கண்டுபிடித்தால் என்ன நடக்கும்? எச் ஐ வி நபருக்கு நபர் எப்படி தொற்றுகிறது? அது எப்படி இல்லாமல் போகிறது? அதற்கு எதிராக நாம் எப்படி காத்துக்கொள்வது? எச் ஐ வி இருப்பதை எப்படி சோதித்து சிகிச்சையளிக்கிறார்கள்? கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களைத் தொற்றிக்கொண்ட எச் ஐ வி குழந்தைகளுக்கு சென்றுவிடாமல் இருப்பதை மருந்துகள் எப்படி உதவுகின்றன? ART (எதிர்ப்பு ரெட்ரோவைரல் தெரபி) எவ்வாறு வேலை செய்கிறது, எப்போது ஒருவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்? நமது நட்புகள் பாலியல் உறவுகளாக எப்படி மற்றும் எப்போது மாறும்? ஒரு நபர் எவ்வாறு ஆணுறைகளை சரியாக உபயோகிக்கிறார்? (ஆண்/பெண்) எச் ஐ வி யுடன் இருக்கும் நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆரோக்கியமாகவும் நலமாகவும் வாழ நாம் கொடுக்கும் ஆதரவுக்கான சிறந்த வழிகள் எவை? எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கொண்ட மக்களுக்கு உதவுகின்ற மிக அருகாமையில் இருக்கும் மருத்துவகங்கள் எங்குள்ளன?

ஒரு The Lifeline விளையாட்டு அல்லது ஒரு Fleet of Hope விளையாட்டுஅல்லது ஒரு உண்மையா அல்லது பொய்யா எனும் விளையாட்டு,பற்றிய மேலும் தகவல்களுக்கும் தயவு செய்து www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org ஆகிய தளங்களைத் தொடர்பு கொள்ளவும்

தமிழ் Home