8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

4 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள் : மலேரியா

 1. தொற்றினால் பாதிக்கப்பட்ட கொசுக் கடித்தல் மூலம் மலேரியா பரவுகிறது.
 2. மலேரியா ஆபத்தான நோய். இது காய்ச்சலை ஏற்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொல்லக்கூடியது.
 3. பூச்சிக்கொல்லி கொசுவலைகளை பயன்படுத்தி தூங்குவதன் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துகொள்ளவும் அக்கொசுக்களை கொல்லவும் முடியும்.
 4. மலேரியா கொசுக்கள் சூரியன் உதிக்கும் நேரத்திலும் மற்றும் சூரியன் மறையும் நேரத்திலும் கடிக்கக்கூடியவை.
 5. குழந்தைகள் மலேரியாவால் பாதிக்கப்படும்போது அவர்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கலாம்.
 6. முன்று வகையான பூச்சிக்கொல்லி தெளித்தல் மூலம் மலேரியா கொசுக்களைக் கொல்லலாம் : வீடுகளை சுற்றி, காற்றில், தண்ணிரில்.
 7. மலேரியா நோய்க்கான அறிகுறிகள் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் வயிற்று வலி மற்றும் குளிர்காய்ச்சல் ஆகியவையாகும். விரைவான சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உயிர்களைக் காக்கின்றன.
 8. மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் சிகிச்சைகள் எடுப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.
 9. மலேரியாவானது, பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்தில் வாழ்கிறது, அவை இரத்த சோகையை ஏற்படுத்தி உடலை சோர்வாகவும் பலவீனமாகவும் ஆக்கிவிடும்.
 10. ஒரு சமூகத்தில் மலேரியா அதிகமாக இருக்கும் நேரத்தில் தடுப்பு மருந்துகள் எடுப்பதன் மூலம் மலேரியா மற்றும் அவற்றால் உண்டாகும் இரத்த சோகையை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org.

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

மலேரியா: குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • உங்களுடைய சொந்த மொழியில் சொந்த சொற்களை பயன்படுத்தி மலேரியா பற்றிய செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அவற்றை மறக்காதீர்கள்.
 • பிற குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பங்களுடன் இச்செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • மலேரியா எப்படி பரவுகிறது என்பது பற்றியும், நாம் ஒன்று கூடி அதனைத் தடுக்கும் முறை குறித்தும் மற்றவர்கள் பார்க்கும் சுவரொட்டிகளை உருவாக்குங்கள்.
 • கொசுக்களின் வாழ்க்கை சுழற்சிமுறை பற்றி பிற குழந்தைகளுக்கு புரியும்படி ஒரு கதை அல்லது ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • பூச்சிக்கொல்லி வலைகளை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துகொள்ளும் முறை பற்றி அறிந்து கொள்ள சுவரொட்டிகளை உருவாக்குங்கள்.
 • கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறை பற்றி ஒரு கதை மூலம் அல்லது ஒரு சுவரொட்டி மூலம் சொல்லுங்கள்.
 • இன்னொரு குழந்தைக்கு மலேரியாவின் அறிகுறிகள் இருப்பதை அறிந்து பெரியவர்களிடம் அக்குழந்தைக்கு மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்பதை சொல்வதற்கு ஒரு கதை அல்லது ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • மலேரியா மற்றும் இரத்த சோகையின் அறிகுறிகள் என்ன என்பதையும் புழுக்கள் எவ்வாறு இரத்த சோகையை உருவாக்குகின்றன மற்றும் மலேரியா எவ்வாறு இரத்த சோகையை உருவாக்கிறது என்பதை பற்றி ஒரு கதை அல்லது ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • உங்கள் சமூகத்திற்கு இரும்புச் சத்து நிறைந்த உணவைப் பற்றிய சுவரொட்டிகளை உருவாக்குங்கள்.
 • உங்களை விட சிறிய குழந்தைகளுக்கு கொசுவலைகளை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துகொள்ள கற்றுக்கொடுங்கள்.
 • படுக்கையின் கொசு வலைகள் ஒழுங்காகசெருகப்பட்டு, எந்த துளைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்!
 • குழந்தைகளுக்கு கொசுவலைகளின் பயன்பாடு குறித்தும் எதற்காக பயன்படுத்துவது என்பது குறித்தும் அதன் நன்மை குறித்தும் விளக்க ஒரு கதை அல்லது ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்!
 • படுக்கையின் கொசு வலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மக்களுக்கு காட்ட ஒரு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யுங்கள்!
 • உங்கள் பள்ளிக்கு ஒரு சுகாதார பணியாளரை அழைத்து படுக்கையின் கொசு வலைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் பற்றி குழந்தைகளுடன் பேசச் சொல்லவும்!
 • பாடல்கள், நடனம், மற்றும் நாடகம் மூலம் இச்செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கேளுங்கள். நாம் மலேரியாவை தடுப்பது எப்படி? நீண்ட கால பூச்சிக்கொல்லி பூசப்பட்ட படுக்கை கொசு வலைகளை மற்றும் ஜன்னல் திரைகளை எப்படி பயன்படுத்துவது மற்றும் அவை எப்படி வேலை செய்கின்றன? சமூகத்தில் நீண்ட கால பூச்சிக்கொல்லி படுக்கை வலைகளை எப்போது மக்கள் பெற முடியும்? மலேரியா எவ்வாறு கொல்கிறது? குறிப்பாக ஏன் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மலேரியா ஆபத்தான நோயாக உள்ளது? சுகாதாரப் பணியாளர்கள் குழந்தைகளுக்கு மலேரியாவை தடுக்க பெண்களுக்கு எந்த வகையான தடுப்புமருந்துகள் கொடுக்கிறார்கள், அதை எப்போது கொடுக்கிறார்கள்? இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (இறைச்சி, சில தானியங்கள் மற்றும் பசுமையான இலை காய்கறிகள்) இரத்த சோகைகளைத் தடுப்பதற்கு எவ்வாறு உதவுகின்றன? மக்கள் எப்படி கொசுக்கடியில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்? மலேரியா இரத்தத்தில் உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்கான சிறப்புப் பரிசோதனையை நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்?

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும் www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org

தமிழ் Home