8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

5 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள்: வயிற்றுப்போக்கு

 1. ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தண்ணீர் போன்று மலம் வருவது வயிற்றுப்போக்கு.
 2. அசுத்தமான உணவு, பானங்கள் உண்பதால் அல்லது அசுத்தமான கரண்டி, பாத்திரம் பயன்படுத்துவதன் மூலமாகவும் அசுத்தமான விரல்களால் வாயைத் துடைக்கும்போது எற்படும் தொற்றால் வயிற்றுப்போக்கு உருவாகும்.
 3. தண்ணீர் மற்றும் திரவங்கள் ஆகியவற்றின் இழப்பு உடலை பலவீனமாக்குகிறது. நம் உடலில் உள்ள திரவங்கள் மாற்றப்படாவிட்டால், வயிற்றுப்போக்கு இளம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாகும்.
 4. சுத்தமான நீர், அல்லது தேங்காய் அல்லது அரிசி கஞ்சி போன்ற கூடுதல் பாதுகாப்பான பானங்கள் கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது நல்லது.
 5. வயிற்றுப்போக்கு கொண்ட குழந்தைகளுக்கு உலர்ந்த வாய் மற்றும் நாக்கு, குழி விழுந்த கண்கள், கண்ணீர், தளர்வான தோல் மற்றும் கை, கால்கள் குளிர்ந்த நிலையில் இருக்கலாம். குழந்தைகளுக்கு உச்சந்தலையில் சிறிய குழி போன்று உருவாகலாம்.
 6. குழந்தைகள் ஒரு நாளில் ஐந்து முறைக்கு மேல் தண்னீர் போன்று மலம் கழித்தாலோ அல்லது இரத்தம் தோய்ந்த மலம் கழித்தாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.
 7. ORS என்பது உடல் வறட்சி நீக்கல் முறையாகும். ORS எடுத்துக்கொள்ள மருத்துவமனை அல்லது மருந்து கடைகளை நாடவும். ORS- ஐ சுத்தமான தண்ணீரில் கலந்து குடிப்பது வயிற்றுப்போக்குக்கு சிறந்தது.
 8. பெரும்பாலான வயிற்றுப்போக்கு மருந்துகள் வேலை செய்யாது ஆனால் 6 மாதம் (வயது) மேலான குழந்தைகளுக்கு துத்தநாகம் மாத்திரைகள் விரைவில் குணப்படுத்தும். ORS- ஐ எடுத்துக்கொள்ளுவது நல்லது.
 9. வயிற்றுப்போக்கு கொண்ட குழந்தைகள் தங்கள் உடல்களை வலுவாக்கிக்கொள்வதற்கு முடிந்தளவு சுவையான, கரைத்த உணவை சாப்பிட வேண்டும்.
 10. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவும், ஆரோக்கியமான உணவு முறை மூலமாகவும், தடுப்பூசிக்கள் போடுவது மூலமாகவும் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org.

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

வயிற்றுப்போக்கு: குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • உங்களுடைய சொந்த மொழியில் சொந்த சொற்களை பயன்படுத்தி வயிற்றுப்போக்குப் பற்றி செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அவற்றை மறக்காதீர்கள்.
 • பிற குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பங்களுடன் இச்செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • நம் உணவை கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு எளிய ஃப்ளை ட்ராப்பை உருவாக்குங்கள்.
 • வயிற்றுப்போக்குக்கான அறிகுறிகளை பற்றி அறிவதற்கு சுவரொட்டிகளை உருவாக்குங்கள்.
 • சுகாதாரப் பணியாளரின் உதவியை நாடுவது பற்றி ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • வயிற்றுப்போக்கு எவ்வாறு தடுக்கப்படலாம் என்பதை அறிய பரமபதம் விளையாட்டு ஒன்றை உருவாக்குங்கள்.
 • உங்களுடைய பள்ளி மற்றும் வீட்டுக்கான முதல் உதவி பெட்டியை உருவாக்குங்கள்.
 • இரண்டு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வயிற்றுப்போக்கிலிருந்து எப்படி காப்பது என்பதை பற்றி பேசிக் கொள்வது போல் ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • வயிற்றுவலி அறிகுறிகள் பற்றி நாம் அறிந்திருப்பதைச் சோதிக்க, ஒரு வயிற்றுப்போக்கு கொண்ட குழந்தையின் படத்தை வரைந்து பாகம் குறிக்கும் ஒரு விளையாட்டை விளையாடுங்கள்.
 • தாவரங்கள் எவ்வாறு வளரும் என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள், தாவரங்களுக்கு நீர் இல்லாதபோது என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியவும்.
 • வயிற்றுப்போக்கைத் தடுக்க நாம் வசித்துவரும் இடங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
 • கிருமிகள் எவ்வளவு விரைவாக பரவக்கூடும் என்பதைக் கண்டறிய கை குலுக்கும் விளையாட்டு ஒன்றை விளையாடுங்கள்.
 • உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு காலம் தாய்ப்பால் குடித்தார்கள் என்று கேளுங்கள்? வயிற்றுப்போக்குக்கு நாம் எப்படி ORS மற்றும் துத்தநாக மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம்? எது போன்ற அறிகுறிகள் இருக்கும்போது நாம் சுகாதாரப் பணியாளரின் உதவியைப் பெற வேண்டும்? வயிற்றுப்போக்கு இருக்கும்போது எது போன்ற பாதுகாப்பான பானங்களை எடுத்து கொள்ள வேண்டும்? சூரிய ஒளி மூலம் குடி தண்ணீரை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்?ORS இல்லாத போது எந்த வகையான பானங்கள் பாதுகாப்பாக இருக்கும்? வயிற்றுப்போக்கு மற்றும் காலரா எவ்வாறு பரவுகின்றன?

மேலும் ஃப்ளை ட்ராப் தயாரித்தல், கை குலுக்கும் விளையாட்டு, சூரிய ஒளி மூலம் தண்ணீரை பாதுகாப்பது போன்ற குறிப்பிட்ட தகவலுக்கு www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org ஐத் தொடர்புகொள்ளவும்

தமிழ் Home