8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

6 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள்: நீர் மற்றும் சுகாதாரம்

 1. சிறிதளவு சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 10 விநாடிகளுக்கு தேய்த்து சுத்தம் செய்த பின்னர் தண்ணீரில் கைகளைக் கழுவி காற்றில் உலர்த்தவும் அல்லது உலர்ந்த துணிகளை பயன்படுத்தவும், அசுத்தமான துணிகளை பயன்படுத்தக்கூடாது.
 2. உங்கள் முகத்தில் T- மண்டலத்தைத் (கண்கள், மூக்கு மற்றும் வாய்) தொடுவதற்கு முன்னர் உங்கள் கைகளை நன்றாக கழுவவும். உங்கள் T- மண்டலத்தை தொடுவதைத் தவிர்க்கவும்.
 3. உணவை சாப்பிடும் முன் அல்லது குழந்தைகளுக்கு உணவளிக்கும் முன், உங்கள் கைகளை கழுவவும்.
 4. உங்கள் உடலையும் துணிகளையும் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் முகம், தலைமுடி, கண்கள், காதுகள், பற்கள், மற்றும் கை கால் விரல்களை சுத்தமாக வைத்திருங்கள். காலணிகள் கிருமிகளிடமிருந்து பாதுக்காக்கின்றன.
 5. மனித மலம் மற்றும் விலங்கு மலத்தினை கொசுக்கள் மற்றும் ஈக்கள் நெருங்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். கழிவறைகளைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கைகளை கழுவுங்கள்.
 6. உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருங்கள். காலை மற்றும் மாலை நேரங்களில், மற்றும் கொசுக்கள் கண்களுக்கு அருகில் பறக்கும் நேரங்களில் சிறிதளவு சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.
 7. அழுக்கு கைகள் அல்லது அசுத்தமான பாத்திரம் கொண்டு பாதுகாப்பான நீரை பயன்படுத்தாதீர். கிருமிகளிடமிருந்து பாதுக்காப்பாக இருங்கள்.
 8. சூரிய ஒளி தண்ணீருக்கு பாதுகாப்பானது. அந்த தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து வைத்து 6 மணிநேரத்திற்கு பிறகு குடிப்பது மிகவும் நல்லது.
 9. கிருமிகளை அழிக்க, கழுவிய பாத்திரங்களை சூரிய ஒளியில் உலர்த்தவும்.
 10. வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதன் முலமாக கொசுக்கள் மற்றும் ஈக்களிடமிருந்து நம்மை பாதுக்காக்கலாம். குப்பைகளை சேகரிக்கும், எரிக்கும் அல்லது புதைக்கும் வரை பாதுகாப்பாக வைக்கவும்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org .

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

நீர் மற்றும் சுகாதாரம் : குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • உங்களுடைய சொந்த மொழியில் சொந்த சொற்களை பயன்படுத்தி நீர் மற்றும் சுகாதாரம் பற்றி செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மறந்துவிடாமல் இருக்க இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவும்!
 • பிற குழந்தைகள் மற்றும் எங்கள் குடும்பங்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • நமது கைகளை எப்படிக் கழுவுவது என நாங்கள் கற்றுக்கொள்ள உதவுகின்ற பாடலைக் கற்றுக்கொள்ளவும்
 • கிருமி கொண்ட குடும்பம் ஒன்று தூய்மையான குடும்பம் இருக்கும் ஊரில் குடிவரும்போது என்ன நடக்கிறது எனக் காட்ட ஒரு நாடகத்தை உருவாக்கி நடிக்கவும் அல்லது கிருமிகள் எங்கே ஒளிந்துகொள்ள விரும்பும் எனவும் நாடகம் நடிக்கவும்.
 • தங்கள் கைகளை சரியாக கழுவ வேண்டும் என்பதை நமதுஇளைய சகோதர சகோதரிகள் தெரிந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • ஒரு மக்கள் குழுவைக் கவனிக்க ஒரு மணி நேரத்தை செலவழிக்கவும், தங்கள் முகங்களை, துணிகளை அல்லது பிற மக்களை எவ்வளவு அடிக்கடி தொடுகிறார்கள் என்பதை பதிவு செய்யவும்.
 • கைகளில் இருந்து கிருமிகள் உடலில் பரவக்கூடிய எல்லா வழிகள் பற்றியும் சிந்தியுங்கள்.
 • பாடசாலை கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய ஒரு திட்டத்தில் ஒன்றாக வேலை செய்யுங்கள்.
 • ஒரு வடிகட்டி மூலம் தண்ணீரை எப்படி சுத்தம் செய்வது என தெரிந்துகொள்ளவும்.
 • பாடசாலை சுற்றுச்சுவர் சுத்தமாகவும் மற்றும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க ஒரு திட்டத்தை உருவாக்கவும்.
 • பள்ளியில் சுகாதார கிளப் ஒன்றைத் துவக்கவும்
 • ஈக்கள், அழுக்கு மற்றும் கிருமிகள் பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நமது குடும்பத்தினரிடம் சொல்லி வைக்கவும்.
 • நமது தண்னீர்ப் பாத்திரத்தை தூய்மையாகவும் மூடியபடியும் வைக்கவும் மற்றும் எப்போதும் கரண்டியை உபயோகிக்கவும், கைகளையோ அல்லது கிண்ணத்தையோ உபயோகிக்கலாகாது. பாத்திரத்திலிருந்து தண்ணீரை எப்படி எடுப்பது என நமதுஇளைய சகோதர சகோதரிகளுக்கு காட்டவும்.
 • Tippy Tap!ஒன்றை எப்படிச் செய்வது என கூட்டாக பணியாற்றுங்கள்
 • நமது உடலைக் கழுவுவதற்காக சோப்பைப் பிடித்துக்கொள்ளும் ஒரு Wash Mitt ஐ எப்படிச் செய்வது.
 • வெல்லம் அல்லது சர்க்கரை நீருடன் ஒரு பிளாஸ்ட்டிக் பாட்டிலைக் கொண்டு ஒரு ஈ பிடிக்கும் பொறியைச் செய்யவும்!
 • Uசூரிய ஒளியை உபயோகித்துவீட்டில் வைத்து குடிப்பதற்கான நீரை தூய்மை செய்யவும்
 • அழுக்கான நீரைதூய்மை செய்ய ஒரு மணல் வடிகட்டியை செய்யவும்.
 • எமது சமூகத்தில் நீர் வழங்கலுக்கான வரைபடம் உருவாக்கி நீரானது குடிக்க பாதுகாப்பானதா இல்லையா எனக் காணவும்.
 • சமையல் பாத்திரங்களை வெய்யிலில் காய வைப்பதற்கு அலமாரி போன்ற ஒன்றைச் செய்யவும்.
 • நமது கைகளை தூய்மையாகவும் கிருமிகள் இல்லாதபடியும் எப்படி வைத்துக்கொள்வது எனக் கேட்கவும்? வீட்டில் வைத்து கைகளைக் கழுவுவதற்கு நம்மிடம் சோப்பு இருக்கிறதா? அருகாமையில் இருக்கும் கடையில் ஒரு சோப்பு என்ன விலையாகிறது? நம் உடல்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்வது? நமது பற்களை துலக்குவது எப்படி? கிருமிகள் எங்கிருந்து வருகின்றன, எங்கு வாழ்கின்றன மற்றும் எப்படி அவை பரவுகின்றன? ஈக்கள் எப்படி வாழ்கின்றன, உண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன? ஈக்கள் தங்கள் கால்களில் அழுக்கை எப்படி கொண்டு செல்கின்றன? நமது நீர் ஆதார வளங்கள் யாவை? அழுக்கான நீரை பாதுகாப்பான நீராக நாம் எப்படி மாற்ற முடியும்? பிளாஸ்ட்டிக் பாட்டில்கள் எங்கு கிடைக்கும்? நீர் வடிகட்டியாக என்ன துணியைப் பயன்படுத்தலாம்? குடும்ப உறுப்பினர்கள் உணவு தயாரிக்கும்போதுஎந்த சுகாதார பழக்கங்களை உபயோகிக்கின்றனர்? அதிகமான அளவில் கிருமிகளைக் கொண்டிருக்கக் கூடிய இடமானது வீட்டிலோ அல்லது சமுதாயத்திலோ எங்கிருக்கிறது?

ஒரு ஈபொறி, தண்ணீரை தூய்மையானதாக ஆக்க வெய்யிலைப் பயன்படுத்தல், அல்லதுமணல் வடிகட்டி, Wash Mitt அல்லது ஒரு டிப்பி டாப்,அல்லது வேறு எந்தத் தகவல்களுக்கும் தயவு செய்து www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org ஆகிய தளங்களைத் தொடர்பு கொள்ளவும்

தமிழ் Home