8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

7 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள்: ஊட்டச்சத்து

 1. நம்மை உந்தித்தள்ளுகின்ற, வளர்வதற்கு உதவுகின்ற, நம்மை பிர்காசிக்கச் செய்கின்ற உணவானது நம் உடலை வலிமையாக்குகிறது!
 2. நாம் உணவைக் குறைவாக வும், கண்டவற்றை உண்பதாலுமே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. சாப்பாட்டின் போது சரியான அளவு சரியான அளவு உட்கார்ந்து பகிர்ந்து உண்பதன் மூலம் அதைத் தவிர்க்கவும்.
 3. 2 வயதுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் நன்றாக வளர்ந்து வருகிறார்களா என சோதித்துக்கொள்வதற்காக 5s மருத்துவகங்களில் அவர்களின் எடையை அவ்வப்போது அளவெடுக்க வேண்டும்.
 4. குழந்தைகள் மெலிந்து காணப்பட்டால் அல்லது முகத்தில் அல்லது காலில் வீங்கியிருந்தால் அல்லது சுறுசுறுப்பில்லாமல் அமைதியாக இருந்தால், அவர்கள் சுகாதார பணியாளர் ஒருவரைப் பார்க்க வேண்டும்.
 5. குழந்தைகள் சுகவீனமாக இருக்கும்போது அவர்களுக்கு பசிக்காது. அவர்களுக்கு ஏராளமான பானம், சூப் மற்றும் வழக்கத்தை விட அதிகமான உணவு கொடுக்கவும்
 6. தாய்ப்பால் மட்டுமே பிறப்பிலிருந்து 6 மாதங்கள் வரைக்கும் ஒரு குழந்தைக்கு இருக்கின்ற ஒரே உணவாகும். அது மேலும் செல்ல, வளர, பிரகாசிக்கச் செய்கிறது!
 7. 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு தாய்ப்பாலுடன் மசித்த அல்லது குடும்பத்தினர் உண்கின்ற உணவினை அரைத்து நாளொன்றுக்கு 3 அல்லது 4 முறை கொடுக்க வேண்டும்; அத்துடன் ஒவ்வொரு உணவுக்கும் இடையில் நொறுக்குத்தீனியும் கொடுக்க வேண்டும்.
 8. வெவ்வேறு நிறம் கொண்ட இயற்கை உணவுகளை ஒவ்வொரு வாரமும் உண்பதே ஆரோக்கியமான சரிவிகித உணவை உண்பதற்கான சிறந்த வழியாகும்.
 9. சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறிகள், நுண்ணிய ஊட்டச்சத்துகள் நிறைந்தவையாகும். இவை பார்ப்பதற்கு சிறியவை, ஆனால் அவைதான் நம் உடலை வலிமையக்குகின்றன.
 10. புழு நீக்க மாத்திரைகளைக் கொண்டு புழுக்களைக் கொல்வது எளிது மற்றும் விலை மலிவானது. அம்மாத்திரைகள் சுகாதாரப்பணியாளர்களால் 6 அல்லது 12 மாதத்திற்கொருமுறை கொடுக்கப்படுகின்றன.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org .

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

ஊட்டச்சத்து: குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • நம்முடைய சொந்த மொழியில் சொந்த சொற்களை பயன்படுத்தி ஊட்டச்சத்து பற்றி செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மறந்துவிடாமல் இருக்க இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவும்!
 • பிற குழந்தைகள் மற்றும் நமது குடும்பத்தினருடன்ன் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 • மற்ற குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவருடன் சேர்ந்து வளர்ச்சிக்கான ஒரு அட்டவணைப் படத்தைத் தேடி அதிர்லிருக்கும் வரிகளுக்கு என்ன அர்த்தம் எனப் பாருங்கள். இதுவே சில சமயங்களில் ஆரோக்கியத்திற்கான சாலையின் அட்டவணைப் படம்; இதனை உங்கள் உடல் ஆரோக்கிய மருத்துவகத்தில் காணலாம்.
 • ஒரு உடல் ஆரோக்கிய மருத்துவகத்திற்கு சென்று குழந்தைகள் எடை போட்டுப் பார்க்கும்போது அவர்களின் எடையை எப்படி வளர்ச்சிக்கான அட்டவணைப் படத்தில் குறிக்கிறார்கள் எனப் பாருங்கள்.
 • ஒரு உடல் ஆரோக்கிய மருத்துவகத்திற்கு சென்று குழந்தைகள் எடை போட்டுப் பார்க்கும்போது அவர்களின் எடையை எப்படி வளர்ச்சிக்கான அட்டவணைப் படத்தில் குறிக்கிறார்கள் எனப் பாருங்கள்.
 • ஊட்டச்சத்து குறைபாடு இருக்கக்கூடிய ஏதேனும் குழந்தைகள் உள்ளனவா என்று அவர்களுக்குத் தெரியுமா என்றும் மற்றும் உதவுவதற்கு அவர்கள் என்ன செய்யலாம் என்றும் கலந்துரையாடவும்.
 • என் குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் / ஒவ்வொரு வாரமும் என்ன சாப்பிடுகிறார்கள் என பதிவு செய்யவும். இயற்கையான நிறங்களில் எவ்வளவு நாம் ஒவ்வொரு வாரத்திலும் சாப்பிடுகிறோம்? நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வளரவும் மிளிரவும் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொருவருக்கும் போதுமான உணவு கிடைகிறதா? நமக்கு எப்படித் தெரியும்? ஒருவர் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறார் என கவனிக்கும்படியாக குறிப்பாக வயதான அல்லது இள வயதினர் எவரேனும் இருக்கிறாரா?
 • ஒருவரை அவர் சாப்பிடும் உணவுதான் சுகவீனமடையக் காரணமாகிறது என்பதற்கான கதைகளைக் கூறக் கேட்கவும்.
 • ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதை எப்படி அறிகிறார்கள் என பெற்றோர், உடல் ஆரோக்கியப் பணியாளர்கள் அல்லது பிறரிடம் இருந்து கண்டறியவும்.
 • உணவுப்பொருட்களின் படங்களைக் காட்டுகின்ற பல்வேறு கட்டங்கள் கொண்ட அட்டையை சிசுக்கள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு வரைந்து காட்டி அதில் அந்த உணவு ஏன் கெட்ட உணவு என அதன் பக்கத்தில் எழுதவும்.
 • 6 மாதங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைகளின் முதலாவது உணவாக தாய்மார்கள் கொடுக்கும் உணவு எது எனக் கண்டுபிடியுங்கள்? தங்கள் குழந்தைகளுக்கு தாய்மார்கள் எவ்வளவு அடிக்கடி உணவூட்டுகிறார்கள்? அவர்கள் பதில்களை பதிவு செய்து நண்பர்களுக்கு முடிவுகளைக் காட்டுகிற ஒரு அட்டவணைப் படத்தை பின்னொரு சமயத்தில் அவர்கள் செய்யலாம்.
 • சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற வைட்டமின் நிறைந்த உணவுகளையும் இந்த உணவுகள் (சந்தையிலோ அல்லது வீட்டிலோ) எப்படித் தயாரிக்கப்படுகின்றன எனக் கண்டறியவும்.
 • உணவு எப்படித் தயாரிக்கப்படுகிறது, தட்டுக்களும் பாத்திரங்களும் எப்படி கழுவப்படுகின்றன மற்றும் உணவு தயாரிக்கின்ற நபர்கள் எப்போது தங்கள் கைகளைக் கழுவுகின்றனர் மற்றும் அதை முறையாகச் செய்கின்றனரா என கூர்ந்து கவனிக்கவும்.
 • ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் நாம் உன்கின்ற உணவுகள் பற்றி படங்கள் வரையவும் மற்றும்/அல்லது எழுதவும். அனைத்து உணவுகளுக்கும் நாம் வண்ணம் சேர்க்கலாம் அல்லது வண்ண பெயரட்டைகளை எழுதலாம்.
 • குழந்தைகளின் முதன் முதலான உணவாகவும் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு உணவாகவும் தாய்மார்கள் கொடுக்கும் உணவு எது எனக் கண்டுபிடியுங்கள் மற்றும் பதில்களை பதிவு செய்து பின்னொரு சமயத்தில் அதற்கான முடிவுகளைக் காட்டுகின்ற அட்டவணைப் படத்தை தங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள்
 • சிசுக்கலுக்கும் குழந்தைகளுக்கும் எந்த உணவு நல்லது அல்லது எந்த உணவு கெட்டது எனவும் அது ஏன் எனவும் தெரிந்துகொள்ளவும். இந்த உணவின் படங்களை நாம் வரையலாம் மற்றும் கட்டங்களுடன் கூடிய ஒரு வரைபடம் செய்து நமது முடிவுகளைக் காட்டலாம்.
 • ஒரு குழந்தை வளர்ச்சியடைவதைச் சரிபார்க்க வளர்ச்சிக்கான கட்டங்களைக் காட்டும் வரைபடம் எப்படி காட்டுகிறது எனக் கேட்கவும். உணவை உலர வைக்க அல்லது பாட்டிலில் அடைக்க அல்லது உணவை புதிதாகவே இருக்க வைப்பதற்கு என்ன வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன? இயற்கையாகவே வண்ணமயமான உணவை சாப்பிடுவது முக்கியம், ஏன்? மக்கள் உடல்நலக்குறைவு அடைந்து அதன் பின்னர் குணமடைந்து வருகையில் என்ன உணவுகள் சாப்பிடுவதற்கு நல்லவை.
 • தாய்ப்பால் பற்றியும் அது ஏன் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதற்கான காரணங்கள் பற்றியும் சுகாதார ஊழியர்களிடமிருந்து தெரிந்துகொள்ளுங்கள்,.
 • சுகவீனமடைந்த ஒரு குழந்தைக்கு போதுமான அளவுடைய நல்ல உணவு மற்றும் பானம் கிடைக்கச் செய்வதற்கு நாம் என்ன செய்யலாம் என்று கேட்கவும்.
 • நமது சமூகத்தில் / நம் நண்பர்களிடையே உள்ள தாய்மார்களில் யாரெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டினார்கள், ஏன்? ஒரு குழந்தை வளர்ச்சியடைகிறபோது தாய்ப்பால் எப்படி மாறுகிறது எனக் கேட்கவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் பாட்டில்கள் ஏன் ஆபத்தானவை?
 • உணவு மோசமாகி அது, சாப்பிடுவதற்குப் பாதுகாப்பாக இல்லை என்று மற்றவர்களிடம் எப்படிச் சொல்வது என தங்கள் மூத்த சகோதர சகோதரிகளிடம் குழந்தைகள் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும் www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org

தமிழ் Home