8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

8 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள்: குடல் புழுக்கள்

 1. மில்லியன்கணக்கான குழந்தைகள் தங்கள் உடல்களின் உள்ளே புழுக்கள் வாழ்ந்தபடி இருக்கிறார்கள், இது உடலின் ஒரு பகுதியாகிய சிறுகுடல்கள் எனும் பகிதியாகும். இங்குதான் நாம் சாப்பிடும் உணவு நமது சரீரங்களால் பயன்படுத்தப்படுகிறது.
 2. பல்வேறு வகையான புழுக்கள் நம் உடலில் வாழ முடியும்: சுருட்டுப்புழு, வால்புழு, கொக்கிப்புழு மற்றும் பில் ஹர்ஸியா (ஸ்கிஸ்ட்டோசோமியாசிஸ்). மற்ற புழுக்களும் இருக்கின்றன!
 3. புழுக்கள் நம்மை சுகவீனம் அடைய அல்லது பலவீனமடையச் செய்யலாம். அவை வயிற்றுவலி, இருமல், காய்ச்சல் மற்றும் சுகவீனத்தை உண்டாக்கலாம்.
 4. புழுக்கள் உங்கள் உடலில் வாழ்கின்றன என்பது அவை உங்களுக்குத் தெரியாது, ஆனால் சில நேரங்களில் உங்கள் மலத்தில் புழுக்களைப் பார்க்க முடியும்.
 5. புழுக்களும் அவற்றின் முட்டைகளும் நம் உடலில் பல்வேறு விதங்களில் நுழைகின்றன. அவை பதுகாப்பற்ற நீனைப் போலவே உணவு மற்றும் பானங்களில் நுழைகின்றன. மற்றவை வெற்றுப்பாதங்களில் நுழைகின்றன.
 6. புழு நீக்க மாத்திரைகளைக் கொண்டு புழுக்களைக் கொல்வது எளிது மற்றும் விலை மலிவானது. சில புழுக்கள் பொருத்தவரை, அவை சுகாதாரப்பணியாளர்களால் 6 அல்லது 12 மாதத்திற்கொருமுறை கொடுக்கப்படுகின்றன
 7. புழுக்களின் முட்டைகள் சிறுநீர் அல்லது மலத்தில் வாழ்கின்றன. கழிவறைகளைப் பயன்படுத்தவும் அல்லதுசிறுநீர் மற்றும் மலத்தை பாதுகாப்பாக வெளியேற்றவும். மலம் அல்லது சிறுநீர் கழித்த பின்னர் உங்களுடைய கைகளை சோப் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இளையவர் யாருக்காவது உதவுங்கள் இதனால் புழுக்களின் முட்டைகள் உங்கள் கையில் நுழையமல் இருக்கும்.
 8. உணவு, சாப்பிடுவது அல்லது குடிப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் கழுவுதல் ஆகியவற்றுக்கு முன்னரும் பாக, மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின்னரும் சோப்புடன் கைகளை கழுவுவதன் மூலமும், மற்றும் காலணிகள் அணிதல் ஆகியவற்றின் மூலம் புழுக்கள் உங்கள் உடலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்துங்கள்.
 9. சில புழுக்கள் மண்ணில் வாழ்கின்றன, எனவே அதைத் தொட்டுவிட்டபின்னர் எப்போதும் உங்கள் கைகளை சோப்புடன் கழுவ வேண்டும்.
 10. சாப்பிடுவதற்கான காய்கறிகள் அல்லது பழங்களைக் கழுவும் போது, மனிதக்கழிவுகள் இல்லாத நீரைப் பயன்படுத்தவும்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org.

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

சிறுகுடல் புழுக்கள்: குழந்தைகள் என்ன செய்ய முடியும்?

 • உங்களுடைய சொந்த மொழியில் சொந்தச் சொற்களை பயன்படுத்தி சிறுகுடல் புழுக்கள் பற்றிய செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மறந்துவிடாமல் இருக்க இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவும்!
 • பிற குழந்தைகள் மற்றும் நமது குடும்பத்தினருடன்ன் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 • வினாடிகளை எடுத்து, புழுக்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு ‘உங்கள் கால்களைக் கொண்டு வாக்களிக்கவும்’ என்பதைப் பயன்படுத்துங்கள்.
 • புழுக்களைப் பற்றி ஒரு கதைக்குச் செவிசாயுங்கள், அதனால் நம் கைகளை கழுவுவதன் மூலம் புழுக்கள் எப்படித் தடுக்க முடியும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
 • நமது பள்ளியில் உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையும் நமது சமையல்காரர் புழுக்களிடமிருந்து எவ்வாறு உணவு பாதுகாப்பாக வைக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
 • மண்ணிலும் தண்ணீரிலும் நுழைந்துவிடுகின்ற புழு முட்டைகள் பரவாமல் தடுக்க குலியலறை அல்லது கழிப்பறையையே எப்போதும் பயன்படுத்துங்கள்.
 • நமது கைகளை முறையாகக் கழுவுவதற்கு சோப்பு, தண்ணீர் மற்றும் சுத்தமான துணிகள் அவசியம்.
 • நமது குடும்பத்தில் உள்ளவர்கள் புழுக்களைப் பற்றி என்ன தெரிந்து கொண்டார்கள் என்பதைக் கண்டறிய ஒரு கருத்தாய்வு நடத்துங்கள்.
 • வஞ்சகமான புழுக்கள் பற்றியும் குழந்தைகள் இந்த வஞ்சகமான புழுக்கள் தங்கள் குடும்பத்தின் உணவை திருடுவதை எப்படி தடுக்கிறார்கள் என்பது பற்றியும் ஒரு நாடகம் நடத்துங்கள்!
 • உணவுப்பொருட்களை எப்படி பாதுகாப்பாகவும், புழுக்கள் இல்லாதபடியும் எப்படி வைத்திருப்பது, பச்சைக்காய்கறிகளை உண்பதற்கு முன்னால் எப்படி கழுவுவது, மாமிசத்தை முறையாக சமைப்பது மற்றும் உணவு சமைப்பது எப்படி என்பது பற்றிய சுவரொட்டிகளைத் தயாரிக்கவும்
 • நமது குடும்பம், வகுப்பறை அல்லது குழுவிற்கு ஒரு டிப்பி டாப் அல்லது ஒரு கை கழுவும் இடத்தை எப்படி செய்வது எனக் கண்டறியவும்.
 • புழுக்கள் பரவாமல் தடுப்பது எப்படி அல்லது எப்போது, எப்படி நமது கைகளை கழுவுவது என்பதை ஞாபகப்படுத்துவது என்பது பற்றி ஒரு பாடல் எழுதுங்கள்.
 • காய்கறிகளையும் பழங்களையும் உண்பதற்கும் சமைப்பதற்கும் முன்னால் கழுவ வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் ஒரு சுவரொட்டியை உருவாக்குங்கள்.
 • புழுக்கள் பரவுவதை எப்படி நிறுத்தலாம் என்பதைப் பற்றி ஒரு நாடகம் அல்லது பொம்மலாட்ட நிகழ்ச்சியை உருவாக்கவும்.
 • புழுக்களைப் பற்றிய நமது அறிவை சோதித்துக்கொள்வதற்காக கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் என்னும் ஒரு விளையாட்டை உருவாக்கி விளையாடவும், அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை செய்யும் முன்பாகக ைகளைக் கழுவுவது எப்போது என்றும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்த பின்னர் கழுவுவது எப்போது என்றும் தெரிந்து கொள்வதற்காக ஒரு வினாடி வினா ஒன்றை உருவாக்கி அதை செய்யவும். உதவிக்கு கீழே உள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள்.
 • நாம் உண்ணும் உணவை நமது உடல்கள் எப்படி உபயோகிக்கின்றன எனக் கேட்கவும்? நமது பெருங்குடல் எவ்வளவு நீளமாக இருக்கிறது? புழுக்கள் நம் உணவை எப்படி எடுத்துக்கொள்கின்றன? ஒரு நாடாப்புழு எவ்வளவு நீளம் வளரும்? எத்தனை வகையான புழுக்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வாழுமிடத்தில் பொதுவாகக் காணப்படும் புழுக்கள் எந்த வகையைச் சேர்ந்தவை? உங்கள் உடலில் புழுக்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் யாவை? புழு நீக்கும் மருந்து உங்களுக்கு எங்கு கிடைக்கும் மற்றும் யாருக்கு அது தேவை? ஒரு புழு ஒவ்வொரு நாளும் எத்தனை முட்டைகள் இடும்? புழுக்கள் நமது உடலில் இருந்து உணவை எடுத்துக்கொள்வதுபோலவே வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்ளலாம் – நமக்கு வைட்டமின் ஏ ஏன் தேவை என உங்களுக்குத் தெரியும்னா? புழுக்களின் குஞ்சுகள் லார்வாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. நமது சருமத்தின் ஊடாக நமது உடலில் நுழையக்கூடிய புழுவின் லார்வா எது? கழிப்பறை அல்லது கழிவறைகளைப் பயன்படுத்துவது என்பது புழுக்கள் பரவாமல் நாம் மலம் கழிப்பதற்கு எவ்விதத்தில் உதவுகிறது? நமது பள்ளிக்கூடத்தில் புழு நீக்கம் செய்வதற்கென ஒரு நாள் ஒதுக்கப்படுகிறதா? அவை எப்போது? அனைவருமே ஒரே நாளில் புழு நீக்க மாத்திரைகளை பெறுவது ஏன்? உலகில் எத்தனை குழந்தைகளுக்கு புழுக்கள் இருக்கின்றன? புழுக்கள் பரவாமல் தடுப்பது என்பது ஏன் முக்கியமானது? நமது செரிமான அமைப்பு பற்றி – அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அதனை வேலை செய்ய விடாமல் தடுக்க புழுக்கள் என்ன செய்கின்றன? ஒரு புழுவின் முட்டை எவ்வளவு சிறியது? உங்களுக்குத் தெரிந்து ஒரு சிறிய பொருள் எது? தண்ணீர் சுத்தமாக அல்லது கலங்கலாக இருக்கிறது என எப்படிச் சொல்வது? தாவரங்கள் வளர்வதற்கு எது அவசியம்? தாவரங்களுக்குக் கொடுப்பதற்கான பாதுகாப்பான உரத்தை நாம் எப்படிச் செய்வது?

ஒரு டிப்பி டாப் அல்லது ஒரு கை கழுவும் இடம் அல்லது ஒரு காலியிடங்களை நிரப்புக விளையாட்டு,அல்லது வேறு எந்தத் தகவல்களுக்கும் தயவு செய்து www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org ஆகிய தளங்களைத் தொடர்பு கொள்ளவும்

தமிழ் Home