8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

இதோ 9 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள்: விபத்துக்கள் மற்றும் காயங்களைத் தடுத்தல்

 1. சமையலறைகளே இளம் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தான பகுதிகளாகும். குழந்தைகளை தீ மற்றும் கூரான கனமான பொருட்கலில் இருந்து தூரமாக இருக்க வைக்கவும்.
 2. தீயிலிருந்து கிளம்பும் புகையை குழந்தைகள் சுவாசித்துவிடாமல் தடுக்க வேண்டும். அது சுகவீனம் மற்றும் இருமலை உண்டாக்குகிறது.
 3. விஷமாக இருக்கும் எதையும் குழந்தைகளுக்கு எட்டாமல் வைக்க வேண்டும். காலியான குளிர்பான பாட்டில்களில் விஷம் எதையும் போட்டு வைக்க வேண்டாம்.
 4. ஒரு குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டுவிட்டால், அந்தக் காயத்தின் மீது குளிர்ந்த நீரை உடனே ஊற்றி விடவும். இதனை வலி குறையும் வரை செய்யவும் (10 நிமிடங்கள் அல்லது கூடுதல் நேரத்திற்கு).
 5. வாகனங்களும் மிதிவண்டிகளும் ஒவ்வொரு நாளும் குழந்தைகளைக் காயப்படுத்துகின்றன அல்லது கொன்றுவிடுகின்றன. அனைத்து வாகனங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கவும் மற்றும் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்றும்கூட காண்பிக்கவும்.
 6. கத்திகள், கண்ணாடி, மின்சார பிளக்குகள், ஒயர்கள், ஆணிகள், ஊசிகள் முதலானவற்றின் ஆபத்துக்களிலிருந்து குழந்தைகளைக் காக்கவும்.
 7. குழந்தைகள் அழுக்கு கைகளை வாயில் வைக்காமல் அல்லது சிறிய பொருட்களை (காசுகள், பொத்தான்கள்) வாய்க்கு அருகில் கொண்டு செல்லாமல் பார்த்துக்கொள்ளவும், ஏனெனில் இவை சுவாசித்தலை அடைத்துவிடும்.
 8. நீர் இருக்கும் இடங்களுக்கு ( ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள்) அருகில் குழந்தைகளை விளையாடவிடாமல் தடுக்கவும், ஏனெனில் அவர்கள் நீரில் விழுந்துவிடலாம்.
 9. வீடு அல்லது பள்ளிக்காக முதல் உதவி தொகுப்பை (சோப்பு, கத்தரிக்கோல், கிருமிநாசினி மற்றும் ஆண்டிசெப்ட்டிக் கிரீம், பஞ்சு, தெர்மாமீட்டர், பேண்டேஜ்கள்/பிளாஸ்ட்டர்கள் மற்றும் ORS ) உருவாக்கவும்
 10. உங்கள் குழந்தையுடன் புதிய இடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்! இளம் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டாக்குபவை பற்றி கவனித்து கேட்டுவைக்கவும்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org .

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

விபத்துக்கள் மற்றும் காயங்களைத் தடுத்தல்: குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • நமது சொந்த மொழியில் நமது வார்த்தைகளையே பயன்படுத்தி விபத்துக்கள் மற்றும் காயங்களைத் தடுத்தல்பற்றிய செய்திகளை உண்டாக்கவும்!
 • செய்திகளை மறந்துவிடாமல் இருக்க இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவும்!
 • இந்தச் செய்திகளை இதர குழந்தைகள் மற்றும் நமது குடும்பத்தினருக்கும் பகிர்ந்துகொள்ளவும்!
 • விஷமான பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது பற்ரிய சுவரொட்டிகளை உண்டாக்கவும்: அவற்றை எப்படி சேமிப்பது, பெயரட்டை இடுவது மற்றும் குழந்தைகளுக்கு எட்டாமல் தூர வைப்பது.
 • எவரேனும் ஒருவர் காயப்பட்டாலும்கூட நாம் உபயோகிப்பதற்காக முதல் உதவித் தொகுப்பினை உண்டாக்கவும்.
 • இளம் குழந்தைகள் விளையாடுவதற்கான பாதுகாப்பான விளையாட்டு பொம்மைகளை உண்டாக்கவும்.
 • ஒரு அவசர நிலையில் ஆறு அல்லது ஏரியில் உபயோகிப்பதற்கான ஒரு கயிறு அல்லது மிதவையை உண்டாக்கவும்.
 • நமது பள்ளிக்காக முதல் உதவித் தொகுப்பினை உண்டாக்கவும்.
 • குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் உண்டாக்க வல்ல பாதுகாப்பு பிரச்சாரத்தை உருவாக்கவும்.
 • நமது சமூகத்திற்குள்ளாக குழந்தைகள் விழுந்து மூழ்கிவிடுவதற்கான ஆபத்து உள்ள நீர்நிலை எங்கிருக்கிறது மற்றும் குழந்தைகலுக் க்ப்பாபதற்காக என்ன செய்யலாம் என்ற ஒரு ஆய்வைச் செய்யவும்
 • ஆனால் ஏன்? விளையாட்டை விளையாடவும் வீட்டில் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய விளையாட்டு.
 • நமது வீடுகளைப் பாதுகாப்பான ஒரு இடமாக ஆக்கும் வழிகள் பற்றி சிந்தியுங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் விளையாட்டுக்கள் பற்றிய யோசனைகளைப் பகிருங்கள்.
 • சுகாதாரப்பணியாளர் ஒருவரிடம் பள்ளி மற்றும் வீட்டில் இருக்க வேண்டிய முதல் உதவித் தொகுப்பினை கண்டுபிடிக்கவும்.
 • உருவாக்கி விளையாடவும் Spot the Dangers எனும் விளையாட்டை ஒரு சுவரொட்டியில் அல்லது வரைபடத்தில் வரைந்து, விபத்துக்களுக்கான அனைத்து ஆபத்துக்களையும் காண முடிகிறதா என்று பாருங்கள்.
 • சாலைகளில் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வல்ல பிரச்சாரத்தை துவக்கவும்.
 • ஒரு குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் நான் இருக்கையில் பாதுகாப்புடன் இருப்பது பற்றிய விழிப்புணர்வு வேண்டும் , இது பற்றிய நாடகம் செய்து காட்டவேண்டும்
 • அடிப்படையான முதல் உதவியைக் கற்றுக்கொள்ளவும், இதனால் ஒரு அவசர நிலைமைஇல் நம்மால் உதவ முடியும், நமது முதலுதவி திறன்களை வளர்த்துக்கொண்டு பழக்கப்படுத்த முடியும், நமது நண்பர்கள் குடும்பத்தினருக்கும் இது பற்றி எடுத்துச்சொல்ல முடியும்.
 • நமது வீட்டில் இருக்கும் இளம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுக்கவும் கண்டுபிடிக்கவும்
 • சிறு குழந்தைகளுக்கு காயம் ஏற்படுவதற்கான நமக்குத் தெரிந்த ஆபத்துக்கள் பற்றி பெரியவர்களிடம் சொல்லி வைக்கவும்.
 • ஒரு சிசு மூச்சுத்திணறும்போது என்ன செய்ய வேண்டும் என கற்று வைக்கவும், பெற்றோர், தாத்தா பாட்டிமார்கள், மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் சொல்லித்தரவும்.
 • தீக்காயங்கள், உயரத்திலிருந்து விசுதல், நீரில் மூழுகுதல் அல்லது போக்குவரத்து நெரிசலான சாலைகளில் இருக்கும் பொதுவான ஆபத்துக்களைக் கண்டறிய கற்றுக்கொள்ளவும்.
 • வீட்டில் தீக்கயங்களுக்கான ஆபத்துக்கள் என்னவென்னக் கேட்கவும்? யாரோ ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் சூடான பொருட்கள் மற்றும் திரவங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக எப்படி வைக்கலாம்? நமது சமுதாயத்தில் குழந்தைகளையும் இளம் சிறார்களையும் அபாயங்களில் இருந்து தூரமாக வைக்கிறார்களா? அப்படியானால் எப்படி? வளர்ந்து விட்ட குழந்தைகள் அல்லது வயதுக்கு வந்தவர்களைக் காட்டிலும் இளம் குழந்தைகளும் சிசுக்களும் மூச்சுத்திணறலுக்கான ஆபத்துக்கள் அதிகம், ஏன்? யாரோ ஒருவர் நீரில் தத்தளிக்கிறார் எனும்போது நம்மை ஆபத்தில் சிக்க வைத்துக்கொள்ளாமல் அவருக்கு எப்படி உதவுவது?

ஒரு டிப்பி டாப் அல்லது ஒரு முதல் உதவித் தொகுப்பில் எதைச் சேர்ப்பது அல்லது ஒரு ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டு எனும் சுவரொட்டி,பற்றிய மேலும் தகவல்களுக்கும் தயவு செய்து www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org ஆகிய தளங்களைத் தொடர்பு கொள்ளவும்

தமிழ் Home