8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

1 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள்: கைக்குழந்தைகளைப் பேனிக்காத்தல்

 1. குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளிடம் முடிந்த வரை சிர்த்து பேசுங்கள், பாடுங்கள் மற்றும் கைப்பிடித்து விளையாடுகங்கள்.
 2. குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் தீடிரன கோவபடுவார்கள், பயப்படுவார்கள் மற்றும் அழுவார்கள் அதை அவர்களுக்கு சொல்ல தெரியாதது. எப்போழுதும் அவர்களிடம் அன்பாக இருங்கள்.
 3. குழந்தைகள் நடப்பது, பேசுவது, குடிப்பது மற்றும் சாப்படுவது போன்றவற்றை சீக்கரம் கற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஆனால் அவர்களாக கற்றுக்கொள்ளவிடுங்கள்.
 4. அனைத்து பெண் மற்றும் ஆண்குழந்தைகள் சமமான அளவில் முக்கியமாணவர்கள். அனைவரையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் குறிப்பாக உடல் நலமற்றவர்கள் மற்றும் உடல் ஊணம் முற்றோற்கள்.
 5. அவர்களைச்சுற்றி நடக்கும் செயல்களை அவர்கள் பிரிதிப்பலிப்பார்கள். அவர்களுடன் இருக்கும்போது நற்ச்செயல்களை செய்யுங்கள் அவர்களுக்கு நல்வழிகாட்டுங்கள் அதேசமயம் உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
 6. குழந்தைகள் அழுவதுதற்க்கு எதாவது காரணம் இருக்கும் (பசி, பயம், வலி). அவை என்னவென்று கண்டுப்பிடுயுங்கள்.
 7. குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் படிப்பதற்க்கு தயாராக எழுத்துக்கள், வார்த்தைகள், ஒவியம் வரைதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு கதைகளை சொல்லுங்கள், அவர்களுடன் பாட்டு பாடுங்கள் மற்றும் நடணம் ஆடுங்கள்.
 8. ஒரு குழுவாக இருந்து கைக்குழந்தை எவ்வாறு வளர்கிறது மற்றும் அக்குழந்தை முதலில் பேசிவது, நடப்பது, அழுவது போன்றவற்றை ஒரு புத்தக்கதில் குறித்து வாருங்கள்.
 9. நோய்கள் வராமல் தடுக்க கைக்குழந்தைகளைப் பேனிக்காக்கும் பெரியவர்கள் மற்றும் பெரிய குழந்தைகள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் சுத்தமாக (குறிப்பாக கை மற்றும் முகம்) வைத்துக்கொள்ளவும், சுத்தமான தண்ணீர் குடிப்பதற்க்கும் போதுமான அளவு உணவு எடுத்துக்கொள்ள உதவிச்செய்யுங்கள்.
 10. கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள் ஆனால் உங்களை மறக்காதீர்கள். நீங்களும் முக்கியமானவர்கள்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org .

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

கைக்குழந்தைகளைப் பேனிக்காத்தல்: குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • உங்களுடைய சொந்த மொழியில் சொந்த சொற்களை பயன்படுத்தி கைக்குழந்தைகளைப் பேனிக்காத்தல் பற்றி செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மனபாடம் செய்துக் கொள்ளுங்கள். அவற்றை மறக்காதீர்கள்.
 • பிற குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பங்களுடன் இச்செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் தனித் தனிக்குழுக்களாக பிரித்து ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளின் விளையாட்டையும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளின் விளையாட்டையும் விளையாடச் செய்யுங்கள். அதன் பிறகு இரண்டு குழுக்களையும் விவாதிக்கச்செய்யுங்கள். உதாரணத்திற்க்கு, இது ஆண்கள் விளையாட்டு, இது பெண்கள் விளையாட்டு என அழைப்பது சரியா? ஏன் சரி? ஏதற்கு சரி அல்ல?
 • நல்ல மற்றும் தீய பழக்கங்கள் பற்றி வீட்டில் அல்லது பள்ளிக்கூடத்தில் விவாதியுங்கள், அவை ஏன் இவ்வாறு அழைக்கப்படுகிறது என் தெரிந்துக்கொள்ளுங்கள்.
 • இந்த தலைப்புப்பற்றி என்ன தெரியும் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்க சுவரொட்டிகளை உருவாக்குங்கள்.
 • உங்கள் சமூகத்தில் மற்றும் உங்கள் வீட்டில், பள்ளிகளில் பொம்மை செய்யும் விளையாட்டடை நடத்துங்கள். உதாரணத்திற்க்கு அலைபேசி, கிலுகிலுப்பை, வீடு கட்டுதல், பொம்மைகள், விலங்குகள் மற்றும் படங்களுடன் கூடிய புத்தக்ங்கள் உருவாக்குதல்.
 • சின்ன சின்ன செயல்கள் எவ்வாறு நோய்களை தடுக்கும் என்பதை காட்ட ஒவியங்கள் மற்றும் சுவரொட்டிகளை உருவாக்குங்கள் உதாரணத்திற்க்கு சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யவது, தடுப்பூசிக்கள் போட்டுக்கொள்வது மற்றும் சரியான உணவு முறை.
 • பராமரிப்பாளர்கள் குழந்தைகளோடு விளையாடுவது பற்றி ஒரு நாடகத்தை உருவாக்குங்கள். இரண்டு தாய்மார்கள் பேசிக்கொள்வது போல் ஒரு நாடகத்தை உருவாக்கலாம் அதில் ஒருவர் குழந்தை அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவராகவும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவராகவும் இருக்கலாம். உணர்ச்சி அல்லது உணர்வுகள் பற்றி சைகைகள் மற்றும் முகம் பாவனைகள் வைத்து ஒரு ஊமை நாடகம் அல்லது நாடகத்தை உருவாக்குங்கள். மற்ற குழந்தைகள் அந்த உணர்ச்சி அல்லது உணர்வுகள் என்ன என கண்டுப்பிடிப்பார்கள்.
 • உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியிடம் கைக்குழந்தைகள் எதற்க்காக சிரிக்கிறது அழுகிறது என்பதை கேட்டுக்கொண்டு அதை உங்கள் வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
 • உங்கள் சமூகத்தில் இருந்து ஒரு குழந்தையை ஒரு வகுப்பு அல்லது ஒரு குழு தத்தெடுக்கலாம். குழந்தையின் தாயார் மாதம் மாதம் குழந்தையின் வளர்ச்சிப் பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுவார்கள்.
 • சுத்தமான தண்ணீர் குடிப்பது, சுத்தமாக இருப்பது போன்ற சின்ன சின்ன செயல்கள் மூலம் நோய்களை தடுக்கலாம் என்பதுக் குறித்து ஒரு பாடலை உருவாக்குங்கள் அதை உங்கள் வீட்டில் உள்ள தம்பி, தங்கைகளுக்கு பாடிக்காட்டுங்கள்.
 • பெரிய பிள்ளைகள் உங்கள் பெற்றோரிடம் கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளவதில் எவை சிரம்மாக இருந்தது எவை பயன்யுள்ளதாக இருந்தது என்று பேட்டிக் காணுங்கள்.
 • ஒரு குழந்தையின் மூளை எப்படி வளர்கிறது என்பதைப் பற்றி சுகாதார ஊழியரை அல்லது அறிவியல் ஆசிரியரிடம் கேளுங்கள்.
 • பெரிய பிள்ளைகள் அவர்கள் சமுகத்தில் உள்ள முதியோரிடம் விளையாட்டு, கதைகள், அல்லது பாடல்களை கற்றுத்தரச்சொல்லி கேட்க்கலாம் அப்பாடல்களை கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு பாடச்சொல்லி கேட்க்கலாம்.
 • கைக்குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பெரியோரிடம் கேட்க்கலாம்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும் www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org

தமிழ் Home